Thursday, July 21, 2011

எங்கிருந்து பேசுகின்றாய்

நாடியுன் போனேடுத்தால் நாய்கள் குரைக்குதடி

ஓடி ஒளிய இடங்காணேன் - கோடிசுகம் 

ஈந்த தமிழ்மாலா எங்கிருந்து பேசுகின்றாய்  

வாழ்ந்த வகைமறந்த வாறு 

Thursday, April 14, 2011

வைகோ முழக்கம்

                                              வைகோ முழக்கம்
மஞ்சத் துண்டார் வஞ்சகத்தால் மாளவும் தயாரானேன்!
அஞ்சாதே எனச் சொல்லி அம்மாதான் கைகொடுத்தார்!
கொஞ்சமாவது சிந்தித்தேனா இந்தக் குறும்புக்காரன்?
ஈழத்தைப்  பேசிப் பேசி இருப்பையும் நழுவவிட்டேன்
வாழத்தான் வேண்டும்! வழித்துணைக்கு யாருள்ளார்?
நாலில் ஒருபங்கு  நயமாகத் தந்துவிட்டால் இந்த
வாலில்லா ஜீவன் வாய்பொத்திக் கொள்வேனே!

வாழத்தான் வேண்டும்! என் வழித்துணைக்கு யாருள்ளார்!
                                                               இப்படிக்கு
                                                                                              வைகோ 

Sunday, March 6, 2011

அறிவில்லார் ஒதுக்கும் அருந்தமிழ்

                   அறிவில்லார் ஒதுக்கும் அருந்தமிழ்

கல்லான் குழுத்தலைமை காண்ட  தவறோன்றே 
பொல்லாப் பகைமை புகுந்ததிங்கு -- வெல்லாத
வாதமிடும்  வம்பினரே! வண்டமிழோர்  பாடிவைத்த 
வேதமொழி வேறோ விளம்பு 


நற்குறளை நாத்திகன் தொடலாமா?

                             நற்குறளை நாத்திகன் தொடலாமா?

சூத்திரம் அறியாப் பேதை சொல்லுஞ்சொல் கவிதை யாகா
ஆத்திரக் காரன் பின்னே அலைந்தவர் அறிஞ ராகார் 
வாய்த்திடும் அரவம் தீண்டின் வாழ்வதும் உறுதி யாமோ 
நாத்திகன் தொட்டான் எண்ணில் நற்குறளுக் கேது காப்பே?

தமிழனை ஏய்க்கும் தற்குறிகள்!

                  தமிழனை ஏய்க்கும் தற்குறிகள்!

கம்பனைப் பழித்துப் பேசிக்  காவியம் எரிப்போ மென்றார் 
வம்பனின் பின்னே சென்று வாயுரை வீர ரானார் 
நம்பின தமிழன் ஏய்த்து நாடதும் ஆள வந்தார்       
கும்பியைக் காய வைத்துக் குழப்பிடக் கற்றுள் ளாரே!

Sunday, February 27, 2011

மணல் கொள்ளை மன்னர்கள்

மணல் கொள்ளை மன்னர்கள்


சகாராவும் போதாது சண்டாளர் கண்ணில் 
மகாநதிஎம் காவிரியின் மண்போல் --  அகோரமாய்
ஊழல் தலைவிரிக்க உலகோர் அதிசயிக்க
ஆள விரும்பிவந்த ஆண்டு 

Monday, February 14, 2011

ஊழலின் ஊற்றே! போதுமினோ பொய்வாழ்வு!

ஊழலின் ஊற்றே...! போதுமினோ பொய்வாழ்வு .....

மூதாதை யோர்என்றும்  முட்டாள்கள் இல்லையென்பார்
பாதாதை நம்கண்ண தாசனும்தான் --   ஓதாத
சொல்லொன்று கண்ட்டீரோ சோம்பிச் சுகம்நாடி
வில்லென்று வாய்குவிக்கும் நீர்

பண்ணிப் பகட்டுரைத்தாய் பண்பாளர் நெஞ்சொடித்தாய்
உன்னை ஒருநாளும் ஓர்ந்துஅறியாய்  -- மண்ணில்
பகுத்தறிவைக் கொன்றாய் பழுத்ததீஞ் சொல்லால்
வகுத்தாரைச் சுட்டாயே வந்து

மூளைச் சலவைகளால் மூத்த தமிழ்க்குடியின்
நாளைக் குறைக்கவந்த நாத்திகத்தை -- வாழவைக்கும்
ஆதவனாய்க் காட்டி அனுதினமும் பேசினையே
போதுமினோ பொய்வாழ்வு போஒய்!

வாழுநா ளெல்லாம் வறியநா ளாக்கிவிட்டு
வீழுநாள் எண்ணிநிற்கும் வீணவரே -- ஊழ்வினையால்
ஊர்சுற்றும் நாய்க்கன்றி உன்காலப் பேர்சொல்ல
யாருன்னால் வாழ்ந்தெழுந்தா ராம்

பொய்வேடம் தாங்கி புகழ்நாடும் உன்றனது
மெய்வேடத் தொண்டரெல்லாம் மேன்மையுற -- ஐயமுற்றே
கோயில்களை நாடிவிட்டார் கூத்தடிக்கும் நீயுனது
வாயில் கொழுக்கட்டை வை

ஊருக்கு உபதேசம் ஓங்கி முழக்கிவரும்
பேருக்கு நாத்தீயப் பேச்சழகா -- பாருக்கு
நீதந்து செல்ல நெறிஏதும் கண்டிருந்தால்
வாவந்து பாசொல்ல வா

குங்குமமும் நீறும் குழைத்தெடுத்த சந்தனமும்
அங்கமதில் கண்டால் அலறுவையே --  இங்குனது
தொண்டராய் வாய்த்தவர்கள் தும்பிக்கை யான்றன்னை
தெண்டனிட்டுக் கொள்வதனைத் தேர்

நெற்றியிலே குங்குமத்தை நேர்கண்டால் ஆகாது
வற்றிவிட்ட வார்த்தைகளால் வார்த்தெடுப்பாய் --  தொற்றுநோய்
 உற்றவரைப் போல்பேசி ஊரைக் கெடுத்தீரே
மற்றவரால் வாழ்ந்திருக்கும் மண் 



















Sunday, January 30, 2011

ஈழப் பெண்ணின் ... இரத்தக் குளியல்

வா பெண்ணே வா...! நீ தான் வரனுக்காக ஏங்கி வடமேற்குத் திசைநோக்கி வாடித் தவம் கிடந்த வனிதையா?
என்ன செய்ய..?  உனக்கு நல்ல வரன் பார்த்தால்.. எங்கள் ஊர் நரியர்களுக்குப் பிடிக்காதே!
 பார்போற்றும் ராஜீவும் பாரிவள்ளல் எம்ஜியாரும் பார்த்த வரனைத்தான் நீகூடப் 
பரிகாசம் செய்தாயே!மாங்கல்யம் சூட்டுமுன்பே உன் உடம்பின் மச்சத்தை எண்ணிப் பார்க்க.....!எங்கள் ஊர் மாப்பிள்ளைகள் வந்தார்கள். 
ஆனால்,அது ,                                                                                                                                மரபல்ல என்றல்லவோ எங்கள் மாமனிதர் எம்ஜியார் மறுத்துச் சொல்லிவிட்டார்.
ஆனால், நீயும் அவர்கள்  மடியில்தான் மயங்கித் தவம் கிடந்தாய்!
அவர்கள் உன்னை மணக்கவா செய்தார்கள்? பாவம் உன்னை மானபங்கப் படுத்தினார்கள்.
உன் கையைக் கொண்டே உன் கண்ணைக் குத்தும் உத்தமர்கள்(!) இன்று எங்கள் ஊரின் உயர்பதவி நாயகர்கள்! 
வழக்கமாகப் பதவிக்கு வருமுன்பு உன்மேல் பரிதாபம் காட்டிப் பேசுவார்கள்.இங்கு,  பதவி மட்டும் கிட்டிவிட்டால்.......! உன்னைப் பார்ப்பதே பாவம் என்று பதுங்கிக் கொள்வார்கள்! 
உன் அழுகைச் சத்தம்தான் அவர்களுக்கு அமுத கானம்! 
பதவி வெறிபிடித்த இந்தப் பச்சோந்திகளை நம்பித்தான் நீயும் பல காலம் தவம் கிடந்தாய். 
இன்று, நீ சிந்திய ரத்தத்தால் இந்தியப் பெருங்கடலைச் சிவப்பாக்கிக் கொண்டிருக்கிறாய்!
 முக்கடலின் சங்கமத்துள் மூழ்கித் தவம் கிடக்கும் முத்தமிழ் நாயகியாம் உன்னை, ரத்தக் குளியலிலிருந்து மீட்பதற்காக எங்களின் இதய தெய்வம் பட்டபாடு கொஞ்சமல்ல. 
தத்துவப் படை ஒன்றுக்கு அவர் தலைமை ஏற்கும் முன்பே, தர்மதேவன் அவரைத் தன் உலகுக்கு அழைத்துக் கொண்டான்...! 
எங்கள் ஊர் இன்று, தறுதலைகளின் ஊழல் கைகளில் தவியாய்த் தவிக்கிறது.
செந்தமிழ் மணக்கும் சித்திரப் பதுமையாய் நின்ற உன்னைச் சிறை மீட்கத் துணிந்தவரும் சிரச்சேதம் ஆகிப் போனார்! நீயும் சீரழிவுக்கு ஆளானாய்! 
தினந்தினமும் உன்னைப் பற்றிப் பேசியே இங்கு செல்வச் சீமானாய் ஆனவர், இன்று சிரித்துச் சிரித்துப் பேசித் தன குடும்ப வாரீசுகளைச் சிகரத்தில் வைத்துக் கொஞ்சுகிறார். 
ஆனால், இவர்தான் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவுமே வாழ்கிறாராம்! 
நீயே நம்பினாய்! பின் என்ன, நாங்களும்தான் நம்பினோம்! 
ஆனால், ஒன்று...!
செந்தமிழ் நங்கை நீ சிந்திய ரத்தத் துளிகள், இந்த வங்கக் கடலிலிருந்து வடிகட்டப் படாதவரை, எங்களின் வாழ்வையும், வளத்தையும் களவாடிய இந்த வசன வியாபாரியின் வாழ்வாதாரம் அத்தனையும் திருடப்பட்டது என்பதையே இந்த வையகம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும். இது சத்தியம்!
                                                சோதிடப் புலவர் 
                                               ௨௮. ௧. ௨௦௧௧

Tuesday, January 25, 2011

செந்தமிழ் அந்தணன்: மீன்களுக்கு உணவிடுங்கள்!

செந்தமிழ் அந்தணன்: மீன்களுக்கு உணவிடுங்கள்!: "தலைப்புப் பக்கத்தில் பசியோடு அலைந்து திரியும் பாவம் அந்த செம்மீன்களுக்குக் கொஞ்சம் உணவு போடுங்களேன்! எப்படிப் போடுவது? புரியவில்லையா? உங்கள்..."

மீன்களுக்கு உணவிடுங்கள்!

தலைப்புப் பக்கத்தில் பசியோடு அலைந்து திரியும் பாவம் அந்த செம்மீன்களுக்குக் கொஞ்சம் உணவு போடுங்களேன்! எப்படிப் போடுவது?
புரியவில்லையா?
உங்கள் மௌஸ் பாயிண்டரால் ஒரு கிளிக் கிளிக்கினால் போதுமே! எல்லா மீன்களும் வயிறார உண்டு உங்களை மனதார வாழ்த்துமே!
                                                                                       நன்றியுடன்,
                                                                                   சோதிடப் புலவர் 






Tuesday, January 18, 2011

காத்தளித்த கார்வண்ணன்

நாத்தீயர் பின்னால் நடந்து களைத்தேனை
காத்தீயக் கண்டெடுத்த கார்வண்ணா-தீத்தீயை
காத்திருந்த கோதைக்குக் காட்டிப் பழியழித்த
மேத்திறத்தை யானினைந்தேன் மேல்!

 

Friday, January 14, 2011

கருணையில்லான் கைபட்டுக் கற்பழிந்த காப்பியங்கள்

கண்ணகிதன் வரலாற்றைக் கருணை யில்லான்
கைதொட்ட மாத்திரத்தில் கற்ப ழிந்தாள்
அண்ணன்மார் வரலாறும் அப்ப டித்தான்
அருங்குறளின் பொலிவழிக்க அவன்எ ழுந்து
பின்னமிட வந்தகுற ளோவி யத்தால்
பெரும்புலவன் செத்தொழிந்தான் தமிழைக் காக்கும்
பண்ணரிதொல் காப்பியமும் தப்ப வில்லை
பாவியிவன் வாழும்நாள் தமிழின் கேடே!