Monday, February 14, 2011

ஊழலின் ஊற்றே! போதுமினோ பொய்வாழ்வு!

ஊழலின் ஊற்றே...! போதுமினோ பொய்வாழ்வு .....

மூதாதை யோர்என்றும்  முட்டாள்கள் இல்லையென்பார்
பாதாதை நம்கண்ண தாசனும்தான் --   ஓதாத
சொல்லொன்று கண்ட்டீரோ சோம்பிச் சுகம்நாடி
வில்லென்று வாய்குவிக்கும் நீர்

பண்ணிப் பகட்டுரைத்தாய் பண்பாளர் நெஞ்சொடித்தாய்
உன்னை ஒருநாளும் ஓர்ந்துஅறியாய்  -- மண்ணில்
பகுத்தறிவைக் கொன்றாய் பழுத்ததீஞ் சொல்லால்
வகுத்தாரைச் சுட்டாயே வந்து

மூளைச் சலவைகளால் மூத்த தமிழ்க்குடியின்
நாளைக் குறைக்கவந்த நாத்திகத்தை -- வாழவைக்கும்
ஆதவனாய்க் காட்டி அனுதினமும் பேசினையே
போதுமினோ பொய்வாழ்வு போஒய்!

வாழுநா ளெல்லாம் வறியநா ளாக்கிவிட்டு
வீழுநாள் எண்ணிநிற்கும் வீணவரே -- ஊழ்வினையால்
ஊர்சுற்றும் நாய்க்கன்றி உன்காலப் பேர்சொல்ல
யாருன்னால் வாழ்ந்தெழுந்தா ராம்

பொய்வேடம் தாங்கி புகழ்நாடும் உன்றனது
மெய்வேடத் தொண்டரெல்லாம் மேன்மையுற -- ஐயமுற்றே
கோயில்களை நாடிவிட்டார் கூத்தடிக்கும் நீயுனது
வாயில் கொழுக்கட்டை வை

ஊருக்கு உபதேசம் ஓங்கி முழக்கிவரும்
பேருக்கு நாத்தீயப் பேச்சழகா -- பாருக்கு
நீதந்து செல்ல நெறிஏதும் கண்டிருந்தால்
வாவந்து பாசொல்ல வா

குங்குமமும் நீறும் குழைத்தெடுத்த சந்தனமும்
அங்கமதில் கண்டால் அலறுவையே --  இங்குனது
தொண்டராய் வாய்த்தவர்கள் தும்பிக்கை யான்றன்னை
தெண்டனிட்டுக் கொள்வதனைத் தேர்

நெற்றியிலே குங்குமத்தை நேர்கண்டால் ஆகாது
வற்றிவிட்ட வார்த்தைகளால் வார்த்தெடுப்பாய் --  தொற்றுநோய்
 உற்றவரைப் போல்பேசி ஊரைக் கெடுத்தீரே
மற்றவரால் வாழ்ந்திருக்கும் மண் 



















No comments:

Post a Comment