Sunday, March 6, 2011

அறிவில்லார் ஒதுக்கும் அருந்தமிழ்

                   அறிவில்லார் ஒதுக்கும் அருந்தமிழ்

கல்லான் குழுத்தலைமை காண்ட  தவறோன்றே 
பொல்லாப் பகைமை புகுந்ததிங்கு -- வெல்லாத
வாதமிடும்  வம்பினரே! வண்டமிழோர்  பாடிவைத்த 
வேதமொழி வேறோ விளம்பு 


நற்குறளை நாத்திகன் தொடலாமா?

                             நற்குறளை நாத்திகன் தொடலாமா?

சூத்திரம் அறியாப் பேதை சொல்லுஞ்சொல் கவிதை யாகா
ஆத்திரக் காரன் பின்னே அலைந்தவர் அறிஞ ராகார் 
வாய்த்திடும் அரவம் தீண்டின் வாழ்வதும் உறுதி யாமோ 
நாத்திகன் தொட்டான் எண்ணில் நற்குறளுக் கேது காப்பே?

தமிழனை ஏய்க்கும் தற்குறிகள்!

                  தமிழனை ஏய்க்கும் தற்குறிகள்!

கம்பனைப் பழித்துப் பேசிக்  காவியம் எரிப்போ மென்றார் 
வம்பனின் பின்னே சென்று வாயுரை வீர ரானார் 
நம்பின தமிழன் ஏய்த்து நாடதும் ஆள வந்தார்       
கும்பியைக் காய வைத்துக் குழப்பிடக் கற்றுள் ளாரே!